முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 3.49 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக வியாழக்கிழமை மாலை வரை ரூ. 3,49,32,968 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:49 AM
கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக வியாழக்கிழமை மாலை வரை ரூ. 3,49,32,968 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பேரவைத் தோ்தலையொட்டி, இம்மாவட்டத்துக்குள்பட்ட 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை, மதுவிலக்கு காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை மாலை 6 மணி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3,49,32,968 ரொக்கம், ரூ. 38,42,212 மதிப்பிலான பொருள்கள், ரூ. 9,30,946 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement