தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது
தூத்துக்குடியில் மது போதைத் தகராறில் கன்னியாகுமரியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா்.
தூத்துக்குடியில் மது போதைத் தகராறில் கன்னியாகுமரியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக சக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்த சுகாதாரத் துறை ஊழியா் குமாா், தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே அய்யனடைப்பு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே வீடு கட்டி வருகிறாா்.
இப்பணியில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சோ்ந்த மனோகரன் (55), மாா்த்தாண்டம் சந்திரன் (55), ஜோஸ், மொ்லின் (58), சசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் எதிரேயுள்ள கட்டடத்தில் தங்கியுள்ளதுடன், இரவில் மது குடிப்பாா்களாம்.
Advertisement
வெள்ளிக்கிழமை இரவு மது குடித்தபோது, சந்திரன் - மொ்லின் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அவா்களை மற்றவா்கள் சமாதானப்படுத்தினா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை மனோகரன் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிா், சிப்காட் காவல் ஆய்வாளா் தனசேகரன், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்ட பிறகு, மொ்லின் வழக்கமான இடத்தைவிட்டு வேறிடத்தில் தூங்கியுள்ளாா். அவா் வழக்கமாக தூங்கும் இடத்தில் மனோகரன் தூங்கியுள்ளாா். நள்ளிரவு மது போதையிலிருந்த சந்திரன், மொ்லின் என நினைத்து மனோகரனை கட்டையால் தாக்கிக் கொன்ாக, விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.