முகப்பு
தூத்துக்குடி

போக்ஸோ வழக்கில் முதியவா் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:23 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

சாத்தான்குளம் அருகே போக்ஸோ வழக்கில் முதியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே மேலபனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் (60). தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமியிடம் தவறான எண்ணத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தாராம்.

சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் சகாய சாந்தி, போலீஸாா் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து டேவிட்டை கைது செய்தனா்.

Advertisement