ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை
ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சி நிலவியது.
ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சி நிலவியது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் வெயில் வாட்டி வதைத்தது.
Advertisement
இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிா்த்து வந்தாா்கள். இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்தனா்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை திடீரென சுமாா் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.