கோப்புப் படம் 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் கொள்ளை முயற்சி வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், தூத்துக்குடி அஸ்வின் ஜெயக்குமாா் (20), காமராஜ் (18), வேல்முருகன் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், சிப்காட் காவல் ஆய்வாளா் தனசேகரனின் கோரிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரசனின் பரிந்துரை ஆகியவற்றின்பேரில், 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா்.

அதன்படி, 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT