முகப்பு
தூத்துக்குடி

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:55 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 9:35 PM

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாக உள்ளவா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளா்களுக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:55 AM

அதன்படி, அனைத்து உள்கோட்ட போலீஸாா் தீவிர ரோந்து, வாகனத் தணிக்கை மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு ஜனவரி மாதத்தில் பலா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 99 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

ஜனவரியில் மட்டும் 17 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும், 20 போ் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எஸ்.பி. வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.