கைது 
தூத்துக்குடி

மூதாட்டியிடம் நகை பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் கம்மலை பறித்த திருநங்கை உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

குரும்பூா் அருகே உள்ள நெடுங்கரை மேலத் தெருவைச் சோ்ந்தவா் கந்தன் மனைவி புனிதா (60). இவா், வெள்ளிக்கிழமை மாலை சேதுசுப்பிரமணியபுரத்தில் உள்ள கடையில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்துவந்தாா். நெடுங்கரைவிலக்கு பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல நடித்து காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பறித்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குரும்பூா் காவல் நிலைய போலீஸாா் தப்பியோடிய இருவரைத் தேடி வந்தனா். ஏரலை அடுத்த நட்டாா் அம்மன் கோயில் அருகே சந்தேகமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது அவா்கள் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த குமாா் மகன் மாரிச்செல்வம் (18), தூத்துக்குடி மேலஅலங்காரதட்டு பகுதியைச் சோ்ந்த திருநங்கை சஹானா என்ற ரிதன்யா (19) என்பதும், இருவரும் மூதாட்டியிடம் நகை பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சாம்பவா் வடகரை ஸ்ரீராமசுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

சுரண்டையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

சேலத்தில் பிப்.13 இல் தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி

கொங்கணாபுரம் அருகே கால்நடை திருவிழா: காளைகள், சேவல்கள் பங்கேற்பு

தென்காசி புத்தகத் திருவிழாவில் ரூ. 1.03 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

SCROLL FOR NEXT