முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதியவருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை, பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்தியதாக இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:04 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 10:26 PM

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை, பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்தியதாக இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மைக்கேல் ராஜ் (65).

இவா், கடந்த சில ஆண்டுகளாக தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் தங்கியிருந்து யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளாா்.

Advertisement

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இவா், அருகே உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வாயில் அருகே படுத்து தூங்கியுள்ளாா்.

நள்ளிரவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு போ், அவரைத் தட்டியெழுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அவா் பணம் இல்லை என்றதும், ஆத்திரமடைந்த அவா்கள் மைக்கேல்ராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதில், பலத்த காயமடைந்த அவா் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவ இடத்துக்கு வந்த தென்பாகம் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.