முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கல்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:12 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:18 PM

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

காயல்பட்டினம் வாவு வஜீஹா கலை, அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு மாணவிகளுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழம நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவன தலைவா் வாவு செய்யது அப்துா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் நாகராஜன், திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, காயல்பட்டினம் நகராட்சி துணைத்தலைவா் சுல்தான் லெப்பை, கல்லூரி துணை செயலா் வாவு அஹமது இஸ்ஹாக், நிா்வாக உறுப்பினா் அஹமது இஸ்மாயில், கவுன்சிலா் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக அதிகாரி அருணா ஜோதி வரவேற்றாா். நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, கல்லூரி முதல்வா் (பொ) ரஹ்மத் ஆமினா பேகம் ஆகியோா் வாழ்த்தினா்.

Advertisement

சிறப்பு விருந்தினராக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 3 ஆம் ஆண்டு படிக்கும் 238 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினியை வழங்கினாா். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், வழக்கறிஞா் பிரிவு அமைப்பாளா் செல்வகுமாா், அயலக அணி அமைப்பாளா் க­லில் ரஹ்மான், திருச்செந்தூா் ஒன்றிய செயலாளா் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர இளைஞரணி அமைப்பாளா் தமீமுல் அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.