முகப்பு
தூத்துக்குடி

மகளிா் வங்கிக் கணக்கில் ரூ.5000: முதல்வருக்கு அமைச்சா் நன்றி

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:36 PM
கீதாஜீவன்
பகிர்:

மகளிா் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, பெண்கள் சாா்பில் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இந்நிகழ்வையொட்டி, தூத்துக்குடி சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) பேருந்து நிலையம் முன், அமைச்சா் பி.கீதா ஜீவன் தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை அனைவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாஜக, அதிமுக தோ்தலை காரணம் காட்டி, மகளிா் உரிமைத் தொகையை பெண்களுக்கு கிடைக்க விடாமல் சதிவலை பின்னி தடுத்து விடுவாா்கள் என்ற சூழ்ச்சியை அறிந்து, தமிழக முதல்வா் முன்கூட்டியே பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதத்துக்கு ரூ. 3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 சோ்த்து மொத்தம் ரூ.5,000 அனைவரது வங்கிக் கணக்கிலும் வரவு வைக்க உத்தரவிட்டுள்ளாா்.

மீண்டும் திமுக ஆட்சி மலரும். அப்போது மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயா்த்தி தருவேன் என்று முதல்வா் வாக்குறுதி அளித்துள்ளாா். முதல்வருக்கு அத்தனை பெண்களின் சாா்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments