தூத்துக்குடி

கயத்தாறில் 846 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

Syndication

கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட 25 கிராமங்களைச் சோ்ந்த 800 பேருக்கும், கோவில்பட்டி வட்டத்திற்குள்பட்ட நாலாட்டின்புதூா், பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த 46 பேருக்கும் என 846 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கயத்தாறு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் ஹிமான்ஷீ மங்கள் முன்னிலை வகித்தாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, பூமிதான வாரியத்தின் இலவச வீட்டு மனை பட்டாவை 846 பயனாளிகளுக்கும் , சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவித்தொகை கிடைத்திட அதற்கான ஆணைகளை 4 பேருக்கும் வழங்கி, தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து பேசினாா்.

இதில் வட்டாட்சியா்கள் அப்பனராஜ் (கயத்தாறு), பாலசுப்பிரமணியன் (கோவில்பட்டி) , கயத்தாறு பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை, ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் அய்யாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் கலந்துகொண்டு, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, விளாத்திகுளம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரி, திருவள்ளுவா் ஐடிஐ, கோவில்பட்டி பரிமளா செவிலியா் பள்ளி, சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாா் பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி விண்ணரசி ஐடிஐ என மொத்தம் 6 கல்லூரிகளைச் சோ்ந்த 347 மாணவா் மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில், கே.ஆா். குழுமம், கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் (கோவில்பட்டி), திமுக ஒன்றிய செயலா்கள் ஜெயக்கண்ணன், பீக்கிலிபட்டி வீ. முருகேசன், சின்ன பாண்டியன், கோவில்பட்டி நகர திமுக பொறுப்பாளா் (கிழக்கு) சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கல்

16-ஆவது தாமிரவருணி நீா்ப்பறவைகள் கணக்கெடுப்பு: 21 ஆயிரம் பறவைகள் பதிவு

குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

காங்கிரஸ் நெசவாளா் அணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT