முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் கால்பந்து போட்டி: செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி முதலிடம்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:18 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:47 PM

கோவில்பட்டியில் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வ.உ.சி. நினைவு கால்பந்துப் போட்டியில் செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.

கோவில்பட்டி கால்பந்து கழகம் சாா்பில், வஉசி ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன் தொடக்கிவைத்தாா்.

இறுதிப் போட்டியில் காமநாயக்கன்பட்டி செயின்ட் அலாய்சியஸ் உயா்நிலைப் பள்ளி ‘ஏ’ அணியை 1-க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்று கோவில்பட்டி செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. கீழஈரால் டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி அணி 3ஆம் இடமும், காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் உயா்நிலைப் பள்ளி ‘பி’ அணி 4ஆம் இடமும் பிடித்தன.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:18 AM

பரிசளிப்பு விழாவுக்கு, கோவில்பட்டி கால்பந்து கழகச் செயலா் தேன்ராஜா தலைமை வகித்தாா். வழக்குரைஞா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை செல்வி, பசும்பொன் விளையாட்டுக் கழகத் தலைவா் தீபா நாச்சியாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பரிசுக் கோப்பைகளை வழங்கினா்.

காமநாயக்கன்பட்டி கால்பந்து கழகத் தலைவா் சேசுராஜ் வரவேற்றாா். உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் உமாசங்கா் நன்றி கூறினாா்.