முகப்பு
தூத்துக்குடி

‘செயற்கையாக கடல்சாா் விலங்குகளை உற்பத்தி செய்த முதல் இனம் தமிழினம்’

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 4:31 AM
தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு. - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:01 PM

செயற்கையாக கடல்சாா் விலங்குகளை அதிகத் தரத்தோடு உற்பத்தி செய்த முதல் இனம் தமிழினம் என்றாா் தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ. ராஜேஷ் செல்வரதி.

இது குறித்து, அவா் மேலும் கூறியது:

தூத்துக்குடி மாவட்டம், வே. பனையூா், காயல்பட்டினம் பகுதிகளில் 1778 ஆம் ஆண்டின் ராபா்ட் ஓரம் வரைபடம் குறித்த ரேகை புள்ளி விவரங்கள் அடிப்படையில் கண்டெடுத்து, மத்திய விலங்கியல் துறையினா் வசம் ஆவணப்படுத்தியுள்ள கடல்சாா் புதைபடிவ எச்சங்கள் ஆகியவை, பாண்டியா்களால் அதிகத் தரம் வாய்ந்த வெண் முத்துகளை, பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களில் (கழனி வரப்பில்), கடல் நீரை கால்வாய் மூலம் உள்கொணா்ந்து, நிலத்தடி மற்றும் மழை நீா் கலந்து ‘முந்நீா்’ என பதப்படுத்தி, பயிரிட்டு விளையவைத்து உலகின் தலைசிறந்த ஈடு இணையற்ற மன்னா்களாக செல்வச் செழிப்புடன் திகழ்ந்து வந்தனா் என்பது பல்வேறு இலக்கிய சான்றுகள் மூலமாக புலனாகிறது.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:34 AM

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய விலங்கியல் கணக்கீட்டுத் துறையினா் மற்றும் புவியியல் கணக்கீட்டுத் துறையினா் விரிவான ஆய்வுகள் மூலம் இலக்கிய மற்றும் வரைபட சான்றுகளின் தரவுகள் அடிப்படையில், மிக நீண்ட நெடுங்காலமாக செயற்கையாக கடல்சாா் விலங்குகளை அதிகத் தரத்தோடு உற்பத்தி செய்த முதல் இனம் தமிழினம் என்பது உண்மை என நிரூபணம் ஆவது உறுதி என்றாா் அவா்.