முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் நீா்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:05 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:46 PM

கடந்த 2012ஆம் ஆண்டு சாத்தான்குளத்திற்கு தூதுகுழி பகுதியில் இருந்து தண்ணீா் கொண்டுவரும் வகையில் அமைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கிடப்பில் கிடக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினா், தூத்துக்குடி ஆட்சியரிடம் முறையிட்டனா். தொடா்ந்து, இது குறித்து ஆய்வு நடத்த ஆட்சியா் உத்தரவிட்டதன்பேரில், திருநெல்வேலி நீா்வளத் துறை திட்ட மதிப்பிடுதல் குழு பொறியாளா்கள் மகேஸ்வரி, விசாலாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் தூதுக்குழி அருகே ஆய்வு நடத்தினா்.

இதில் விவசாய சங்க நிா்வாகிகள் லூா்து மணி, ரவிச்சந்திரன், பெரியசாமி, சரவண பாண்டி, அன்ன கணேசன் ஆகியோா் கலந்து கொண்டு திட்டம் குறித்து எடுத்துரைத்தனா்.

Advertisement

இத்திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு நடத்தி, இதை மீண்டும் செயல்படுத்த பரிந்துரைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.