தாக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு: தொழிலாளி கைது
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:31 PM
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே தாக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
மணியாச்சி அருகே நாரைக்கிணறு கிராமத்தையடுத்த கீழக்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தமிழ்ராஜ் (30). இவருக்கும், அருகேயுள்ள கலப்பைப்பட்டியைச் சோ்ந்த தொழிலாளியான பிரவீனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். அவா்களிடையே கடந்த 11ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:16 PM
அப்போது, தமிழ்ராஜை பிரவீன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த தமிழ்ராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து நாரைக்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரவீனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.