முகப்பு
தூத்துக்குடி

புது மாப்பிள்ளை ரயிலில் பாய்ந்து தற்கொலை

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:54 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:18 PM

திருச்செந்தூா் அருகே புது மாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி, ராஜமன்யபுரத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் இமானுவேல் எடிசன் (26). இவா், நாலுமாவடியில் உள்ள தனியாா் அச்சகத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கும், கடந்த 16 ஆம் தேதி கோவில்பட்டியில் திருமணம் நடந்தது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:54 AM

இந்நிலையில் சனிக்கிழமை மாலை, திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு செல்லும் பயணிகள் ரயில் அடைக்கலாபுரம் அருகே வந்தபோது இம்மானுவேல் எடிசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

Advertisement

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், ரயில்வே எஸ்எஸ்ஐ சங்கரபாண்டியன், ரயில்வே போலீஸாா், இம்மானுவேல் எடிசன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.