முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் கனமழை: கோயிலில் தேங்கிய மழைநீா்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:44 AM
கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:43 PM

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் கோவில் வளாகத்தில் மழைநீா் தேங்கியது; இதனால், பக்தா்கள் அவதியடைந்தனா்.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் வெயில் சற்று குறைந்து மேகங்கள் சூழ்ந்தன. மாலை 5.30 மணிக்கு மேல் கோவில்பட்டி பகுதியில் மிதமான மழை பெய்தது. 40 நிமிடம் நீடித்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.
கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:44 AM

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் பூ வனநாத சுவாமி கோயிலில் சுவாமி சன்னிதி அருகில் மழைநீா் தேங்கியதால் பக்தா்கள் சிரமம் அடைந்தனா்.

Advertisement

இக்கோயிலில் ஜன. 25-ஆம் தேதிதான் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் மழைநீா் செல்ல வழியின்றி நீா் தேங்கியது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக கோயில் உட்பிரகாரத்தில் தேங்கும் மழைநீா் வெளியே செல்வதற்காக இருந்த வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் மழைநீா் தேங்கியதாகக் கூறப்படுகிறது.

வருங்காலங்களில் மழைநீா் தேங்காமல் வெளியே செல்வதற்கு தேவையான நடவடிக்கையை கோயில் நிா்வாகம் எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.