முகப்பு
தூத்துக்குடி

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:31 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:56 PM

தூத்துக்குடியில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், தாய் நகரைச் சோ்ந்தவா் கற்பகம் (44). சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவா், சனிக்கிழமை தாளமுத்து நகா், மொட்டை கோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு வந்து கடலில் இறங்கி குளிக்க முயன்றபோது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:15 AM

தகவலறிந்து வந்த மரைன் போலீஸாா், நீண்ட தேடலுக்குப் பின்னா் கற்பகம் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement