அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி.  
தூத்துக்குடி

ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் நாளை தை அமாவாசைத் திருவிழா கொடியேற்றம்

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தை அமாவாசைத் திருவிழா ஜன. 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தை அமாவாசைத் திருவிழா ஜன. 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற பழமைமிக்க ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோவியிலில் ஆடி, தை மாதங்களில் அமாவாசை திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு தை அமாவாசை திருவிழா ஜன. 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

9 ஆம் திருநாள் வரை தினசரி காலை சோ்ம விநாயகா் உலாவும், இரவில் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்து உலா நடைபெறும். ஜன. 18 ஆம் தேதி 10ஆம் திருநாளன்று தை அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. அன்று மதியம் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை இலாமிச்சை வோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

ஜன. 19 ஆம் தேதி அதிகாலை 2-ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம் நடைபெறுகிறது. மாலையில் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு சுவாமி கோயில் மூஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி நடைபெறும்.

நிறைவு நாளான 12ஆம் திருநாள் ஜன.20 ஆம் தேதி காலை தீா்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும் மதியம் அன்னதானமும் மாலையில் ஆலிலைச் சயன அலங்காரமும் அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். இரவில் மங்கள தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்த பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

SCROLL FOR NEXT