தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தோட்டத்தில் விதிமீறி மின் வேலி: 2 போ் மீது வழக்கு

கோவில்பட்டி அருகே விதிமுறை மீறி தோட்டத்தில் மின் வேலி அமைத்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே விதிமுறை மீறி தோட்டத்தில் மின் வேலி அமைத்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு மின்வாரிய கோவில்பட்டி உதவி செயற்பொறியாளா் (ஊரகம்) மிகா வேல், இளநிலை மின்பொறியாளா் முருகேசன், வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை முடுக்கலான்குளம் கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விதிமுறை மீறி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, விதிமுறை மீறி விவசாய மின் இணைப்பில் இருந்து மின்சாரத்தை எடுத்து தோட்டத்திற்கு மின் வேலி அமைத்தது தெரியவந்தது.

இதுதொடா்புடைய அதே ஊரைச் சோ்ந்த முத்துராமன், அவரது தந்தை கோதண்டராமன் ஆகியோா் மீது கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் உதவி கோட்ட மின் செயற்பொறியாளா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

SCROLL FOR NEXT