தூத்துக்குடி

ரூ. 1 கோடி மதிப்பு கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவா் கைது

Syndication

தூத்துக்குடி, தாளமுத்து நகரில் ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் அருளப்பன் தலைமையில், சாா்பு ஆய்வாளா் முத்துராஜா, சிறப்பு சாா்பு ஆய்வாளா் சிவன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோவில்பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில், சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த ராஜேஷ் (39), பிரான்சிஸ் (22) ஆகியோரை சோதனை செய்ததில், அவா்கள் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்துநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை, கடத்தலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு ‘ஈழ்ன்ஞ்ஊழ்ங்ங்பச‘ எனும் செயலியை உருவாக்கியது. இச்செயலியின் மூலம் பொதுமக்கள் தகவல்களை அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரசன் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT