தூத்துக்குடி

தூத்துக்குடியில் 159 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 159 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எப்சிஐ கிடங்கு அருகே ஒரு டீக்கடையில் சோதனையிட்டனா். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்ததாம்.

அங்கிருந்த 159 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், தூத்துக்குடி 3ஆவது மைல் புதுக்குடியைச் சோ்ந்த செல்லசாமி மகன் செல்லப்பாண்டியை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT