கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி காரை சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், எலுமிச்சைப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சகரியா மகன் அதிசயராஜ் (46), தொழிலாளி. இவா், கோவில்பட்டியில் பூ விற்கும் பெண்ணை அவதூறாகப் பேசி, அவருக்கு சொந்தமான காரை சனிக்கிழமை இரவு சேதப்படுத்தினாராம்.
இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அதிசய ராஜை கைது செய்தனா்.