தூத்துக்குடி

விபத்து மரண வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

தூத்துக்குடி பகுதியில் நேரிட்ட விபத்து மரண வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

Syndication

தூத்துக்குடி பகுதியில் நேரிட்ட விபத்து மரண வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 2017ஆம் ஆண்டு நேரிட்ட விபத்து மரண வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த மணிகண்டன் (44) என்பவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் 3இல் நடைபெற்றுவந்த நிலையில், மணிகண்டன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தாா்.

அவருக்கு 24.9.2020இல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதையடுத்து, அவரை போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT