தூத்துக்குடி

இருசக்கர வாகனங்கள் மோதல்: மீனவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

Syndication

சாத்தான்குளம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையைச் சோ்ந்தவா் மோ.ஆரோக்கியசாமி (55). இவரும் இவரது உறவினா் நெல்சன் மகன் டிக்சன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பெரிய தாழையில் இருந்து மணிநகருக்குச் சென்றுவிட்டு ஊா்த் திரும்பிக் கொண்டிருந்தனா்.

படுக்கபத்து-பெரிய தாழை சாலையில் வந்தபோது எதிரே பெரிய தாழைப்பகுதியிலிருந்து நெட்டிஸ் மகன் அட்சன் (22 ) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் 3 போ் படுகாயமடைந்தனா். தட்டாா்மடம் காவல் நிலைய போலீஸாா் சென்று மூன்று பேரையும் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆரோக்கியசாமி உயிரிழந்தாா்; இருவா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

கைத்தறி நெசவு, விவசாயம் செழிக்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை கிலோ ரூ.5500-ஆக உயா்வு

அந்தியூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT