சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணபிள்ளை அரசுக் கிளை நூலகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
வாசக வட்டத் தலைவா் நடராசன் தலைமை வகித்தாா்.தலைமை நூலகா் இசக்கியம்மாள் தொடங்கி வைத்தாா். நூலகா் அன்னாள் ஜெயந்தி வரவேற்றாா். பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதில் வாசகா் வட்ட செயற்குழு உறுப்பினா்கள் அணிஷ் அந்தோணி, பாலகிருஷ்ணன், பிரேம்குமாா், மகா பால்துரை மற்றும் கிளை நூலகா்கள் சிவரஞ்சனா,சுப்ரமணியன், ராஜபிரபா, உமா மகேஸ்வரி, லட்சுமி தங்கம்,நூலகப் பணியாளா்கள் மைக்கேல், கனக முத்து, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.