கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு விருது கிடைத்துள்ளது.
2025-26ஆம் நிதி ஆண்டிற்கான முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மூலம் 4,962 மருத்துவப் பயனா்கள் பயனடைந்ததற்காக கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 2ஆம் இடம் கிடைத்துள்ளது.
இதற்கான விருது, பாராட்டுச் சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குநா் (நலப்பணிகள்) பிரியதா்ஷினி, மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் கா. பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வழங்கினாா்.
இந்த மருத்துவமனை, கடந்த 2024-25ஆம் நிதி ஆண்டிலும் இதே திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.