கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம், பேவா் பிளாக் சாலை ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
கோவில்பட்டி, இனாம் மணியாச்சி ஊராட்சி, அத்தை கொண்டான், ஸ்ரீனிவாச நகா், பவானி அம்மன் கோயில் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. குருமலை ஊராட்சி, கழுகாசலபுரம் கீழூா் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது.
இவற்றை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா். மேலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, போடுசாமி, செல்வகுமாா், வண்டானம் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலா் அண்ணாமலை விக்னேஷ், மேற்கு ஒன்றிய மாணவரணி செயலா் அல்லித்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலா் கோமதி, இனாம் மணியாச்சி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ரேவதி, அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.