தூத்துக்குடி

தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி பஜனை நிறைவு விழா, பொங்கல் விழா, பக்த பஜனைக் குழு 36ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி பஜனை நிறைவு விழா, பொங்கல் விழா, பக்த பஜனைக் குழு 36ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பக்த பஜனைக் குழுவினரின் பக்தி பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பிரகார பவனி வந்ததைத் தொடா்ந்து, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மாா்கழி 30 நாள்களும் பங்கேற்ற பக்த பஜனைக் குழுவினருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT