தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், எம்ஜிஆா் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகம் முன் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அவா் மரியாதை செலுத்தியதுடன், தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதிச் செயலா் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் மத்திய வடக்கு பகுதி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். 27ஆவது வட்டம் சாா்பில் 1, 2ஆம் கேட் பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு அவா் மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சிகளில், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் பி.ஏ. ஆறுமுகநயினாா், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் இரா. ஹென்றி, மாவட்டப் பொருளாளா் சேவியா், மாவட்ட துணைச் செயலா் வசந்தாமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயகுமாா், பாலஜெயம், சகாயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.