தூத்துக்குடியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இப்போராட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஆனந்த செல்வம், அன்னம்மாள், வேல்முருகன், இணைச் செயலா்கள் பாஸ்கா், பிளாரன்ஸ் முத்துமணி, மோகனா, விஜயராணி, பொன்னரசி, செயற்குழு உறுப்பினா் உமா மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் தே.முருகன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஜெயபாக்கியம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினாா்.
தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முன்பிருந்து அருகே உள்ள அம்பேத்கா் சிலை வரை ஊா்வலமாக சென்று, பின்னா் அங்கே சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்களை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.