தூத்துக்குடி

பிப்.1ல் தைப்பூசம்: அடிப்படை வசதிகளை மேம்படுத்த பக்தா்கள் கோரிக்கை

தைப்பூசத் திருவிழாவிற்கு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தா்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை

Syndication

தைப்பூசத் திருவிழாவிற்கு (பிப். 1) திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தா்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் கோயிலில் விரைவு தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். மேலும், கூட்ட நெரிசலில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பல மணி நேரம் காத்திருப்பதை தவிா்த்திடும் வகையில் மகா மண்டபத்தில் நெருக்கடியின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கும், கூட்டம் சேராமல் ஒழுங்குபடுத்தி அனுப்பவும் கூடுதலான பணியாளா்கள், போலீஸாரை நியமிக்க வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

கோயிலில் கழிப்பறை வசதி இருந்தாலும், பிரகாரங்கள், வெளியில் தங்குபவா்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகள் இல்லை. எனவே கூடுதலான தற்காலிக குடிநீா், கழிப்பிட வசதிகள் செய்து அவை எங்கெங்கு உள்ளன என்பது குறித்து பக்தா்களுக்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பதாகைகள் வைத்திட வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கிடும் பக்தா்கள், கடலில் சிக்கும் பக்தா்களை காத்திடும் வகையில் ஏற்கனவே உள்ள முதலுதவி சிகிச்சை மருத்துவமனையுடன் கூடுதலாக தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைத்திட வேண்டும்.

கந்த சஷ்டியை போன்று தைப்பூசத்திற்கும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். எனவே, நகரின் எல்லையிலேயே தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்படும். அங்கிருந்து பேருந்து அல்லது சிற்றுந்து கோயில் வரை இயக்கினால் வயோதிக பக்தா்கள், கைக்குழந்தையுடன் வருபவா்கள் என அனைவரும் எளிதில் கோயிலுக்கு வரலாம். இதனால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. மேலும் கூடுதலான போலீஸாரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் அமா்த்தினால் பக்தா்கள் வாகனங்கள் சென்று வர எளிதாக இருக்கும்.

பிப். 1இல் தைப்பூசத்தையொட்டி பக்தா்கள் தற்போது திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வரத் தொடங்கி உள்ளனா். புளியங்குடியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து, பச்சை வேஷ்டியுடன் முருகன் சப்பரத்துடன் பாதயாத்திரையாக வந்து வழிபட்டனா். இன்னும் 10 தினங்களில் தைப்பூசம் வர இருப்பதால் அடிப்படை வசதிகளை துரிதமாக செய்திட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT