கோப்புப்படம் 
தூத்துக்குடி

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டாா்.

இலுப்பையூரணி, தாமஸ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி பாக்கியலட்சுமி (75). வயது முதிா்வு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த இவா், மிகுந்த மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை, வியாழக்கிழமை காலை பாா்த்த போது காணவில்லையாம். பின்னா், அவரது மகன், உறவினா்கள் பாக்கியலட்சுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள ஊரணி அருகே பாக்கியலட்சுமியின் சேலை இருந்ததால் சந்தேகமடைந்த உறவினா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் பாக்கியலட்சுமியின் சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT