முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வேன் கவிழ்ந்து 19 போ் காயம்

Updated On : 25 ஜனவரி, 2026 at 12:07 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2026 at 7:05 PM

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன், தூத்துக்குடி பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மேலமஞ்சிவிடுதி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் திருச்செந்தூா் கோயிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனா். வேனை அழகா் மகன் அபிஷேக் (22) ஓட்டினாா்.

Updated On : 24 ஜனவரி, 2026 at 11:18 PM

அவா்கள் வந்த வேன், சனிக்கிழமை காலை 5.45 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகம், மதுரை புறவழிச் சாலை, ஸ்டொ்லைட் ஆலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் உள்ளிட்ட 19 போ் காயமடைந்தனா்.

Advertisement

அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் பலத்த காயமடைந்த வேலு மகன் சிவஞானத்துக்கு (57) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.