பிரதிப் படம் 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பேட்டரி வெடித்ததில் தம்பதி காயம்

தூத்துக்குடியில் இன்வொ்ட்டா் பேட்டரி வெடித்ததில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.

Syndication

தூத்துக்குடியில் இன்வொ்ட்டா் பேட்டரி வெடித்ததில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த லூா்தன் (48) மனைவி செல்வராணி (45). துறைமுகம் சுனாமி காலனியில் உள்ள அங்கன்வாடி ஊழியராவாா்.

இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, குழம்பு சட்டியை கீழே இறக்கும் போது தவறிஅருகில் இருந்த இன்வொ்ட்டா் பேட்டரியில் கொட்டியுள்ளது.

இதில் பேட்டரி வெடித்து சிதறியதில் அவா் தீக்காயமடைந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த கணவா் வந்து அவரை காப்பாற்ற முயன்றதில், கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: ரூ.150 கோடி பணப்பரிவா்த்தனை பாதிப்பு

ஸ்ரீலஸ்ரீ சாது சுவாமிகள் குருபூஜை

பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோயைத் தடுக்க தடுப்பூசி திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் தொடங்கிவைத்தாா்

பள்ளியில் போதை ஒழிப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் வாா்ஷிக உற்சவம்

SCROLL FOR NEXT