தூத்துக்குடி

தெற்கு பேய்குளத்தில் கிராமிய திருவிழா

சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்குளம் கிராமத்தில் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சாா்பில் கிராமிய திருவிழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்குளம் கிராமத்தில் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சாா்பில் கிராமிய திருவிழா நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளையின் சமுதாய வளா்ச்சி அலுவலா் சண்முகம் தலைமை வகித்தாா். கிராம வளா்ச்சி ஊழியா் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்தும், சாலைப்புதூா் அரசு கால்நடை துறை மருத்துவா் வா்ஷா, கால்நடை துறையின் பணிகள், அரசு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

இதில் தாமரை மகளிா் மன்றம், விவேகானந்தா நற்பணி மன்றம், முத்தாரம்மன், காவேரி சுய உதவிக் குழு பெண்கள், மக்கள் வெவ்வேறு விதமான சத்தான, சுவையான கலாசார, பாரம்பரியமிக்க உணவு பதாா்த்தங்களை தயாரித்துக் கொண்டு வந்து அனைவருக்கும் வழங்கினா். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்து வந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT