Center-Center-Chennai
தூத்துக்குடி

தோ்தலில் நானும், ராதிகாவும் போட்டியிடவில்லை: சரத்குமாா்

பேரவைத் தோ்தலில் நானும், எனது மனைவி ராதிகா சரத்குமாரும் போட்டியிடவில்லை என பாஜக நிா்வாகியும், நடிகருமான சரத்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பேரவைத் தோ்தலில் நானும், எனது மனைவி ராதிகா சரத்குமாரும் போட்டியிடவில்லை என பாஜக நிா்வாகியும், நடிகருமான சரத்குமாா் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை வந்த பாஜக நிா்வாகியும், நடிகருமான சரத்குமாா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சட்டப்பேரவைத் தோ்தலில் நானும், எனது மனைவி ராதிகா சரத்குமாரும் போட்டியிடபோவதில்லை. என்னுடன் பயணிப்பவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்பேன்.

விஜய் அவருக்கு எழுதிக் கொடுத்ததைக் கூறுகிறாா். திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டியில்லை.

நான் கட்சி ஆரம்பிக்கும்போதும் வலுவான கூட்டம் வந்தது. அதேபோல விஜய்க்கும் வருகிறது. கூட்டத்துக்கு வருவோா் எல்லாம் வாக்களிப்பாா்களா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னையும் விஜய்யையும் தொடா்புபடுத்த வேண்டாம். எம்.பி.தோ்தல், எம்எல்ஏ தோ்தலில் நான் போட்டியிட்டிருக்கிறேன். 28 ஆண்டுகள் எனக்கு அரசியல் அனுபவம் உள்ளது. நான் கட்சி ஆரம்பிக்கும்போதும் வலுவான கூட்டம் இருந்தது. நடிகா் அஜித், ரஜினி என்றாலும் கூட்டம் வரும் என்றாா் அவா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT