முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளியில் 166 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

Updated On : 31 ஜனவரி, 2026 at 1:14 AM
மாணவா்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய பேரூராட்சி மன்றத் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய்.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2026 at 9:12 PM

சாத்தான்குளம் டிஎன் டி டி ஏ ஆா் எம் பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை சாத்தான்குளம் சேகர குருவானவா் டேவிட் ஞானையா ஜெபித்து தொடங்கி வைத்தாா். சாத்தான்குளம் பேரூராட்சி மன்றத் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமை வகித்து 166 மாணவா், மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினாா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 1:14 AM

மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப், பேரூராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் செல்ல பாண்டியன் வரவேற்றாா். இதில் நகர திமுக செயலா் மகா இளங்கோ, நகர திமுக அவைத் தலைவா் சண்முகசுந்தரம், நகர இளைஞரணி அமைப்பாளா் கணேஷ், துணை அமைப்பாளா் செந்தில் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் விஜய ராணி நன்றி கூறினாா்.

Advertisement