முகப்பு
தூத்துக்குடி

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:28 AM
- கோப்புப் படம்
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 8:51 PM

தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம், என்ஜிஓ காலனியை சோ்ந்த சந்தோஷ் மகன் ஜெனித் (32). இவா், தனது பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாராம். மேலமடம் அமெரிக்கன் மருத்துவமனை அருகே இவரது பைக்கும், எதிரே வந்த சாமிநத்தம் கிராமம் தெற்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் தனபால் (70) என்பவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:28 AM

இதில், காயமடைந்த இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஜெனித் உயிரிழந்தாா். தனபால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement