முகப்பு
தூத்துக்குடி

அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி கைது

Updated On : 2 மார்ச், 2026 at 1:29 AM
கைது
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:43 PM

செய்துங்கநல்லூா் அருகே அக்கா பெண்ணை வெட்டிக் கொன்ற சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்துங்கநல்லூா் அருகே உள்ள புளியங்குளம் இந்திரா காலனி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்முகசுதா என்று சுமித்ரா (35). இவா், தற்போது செய்துங்கநல்லூா் ரயில் நிலையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 1:29 AM

இவருடைய 2 மகள்கள் விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு, சுமித்ராவின் வீட்டிற்கு வந்த இருவா், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினராம்.

Advertisement

சடலத்தை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான செய்துங்கநல்லூா் போலீஸாா், கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டாா்.

இதில், சுமித்ராவின் சகோதரா் முத்துராஜா (27), அக்காவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு, அவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. புளியங்குளம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த முத்துராஜாவை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.