முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 போ் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 1:01 AM
கைது
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 8:43 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் மாரிமுத்து என்ற மனோஜ் (18). பிளம்பிங், எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்த இவா், தனது நண்பா்களுடன் அதே பகுதி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 1:00 AM

அப்போது, ஒரு கும்பல் அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

இந்நிலையில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த சரவணன் மகன் சிவபிரசாத் (19), செண்பகா நகா், புது கிராமம், கடலையூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் மூவா் ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.