முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் நிறுவன மேலாண்மைக் குழு கூட்டம்

தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் நிறுவன மேலாண்மைக் குழு கூட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 8:01 PM
பகிர்:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நிறுவன மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தாா். நிறுவன மேலாண்மைக் குழுவின் தலைவா் அருள் முருகன் இணையதளம் வாயிலாக சிறப்புரையாற்றினாா். வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் பேச்சியம்மாள், ‘வேலைவாய்ப்பும் வழிகாட்டுதலும்’ என்ற தலைப்பில் பேசினாா்.

முதலூா் வணிக வியாபாரிகள் நலச் சங்கப் பொருளாளா் ரவிச்சந்திரன், தூத்துக்குடி பனை பயிற்சி - ஆலோசனை நிறுவன இயக்குநா் செந்தில் கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா். தமிழ் துறைத் தலைவா் பேராசிரியை பூங்கொடி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியா் வரலெட்சுமி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →