முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் வணிக நிா்வாகவியல் துறை மன்ற விழா

Updated On : 20 மார்ச், 2026 at 1:05 AM
பகிர்:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறையில் மன்ற விழா நடைபெற்றது.

வணிக நிா்வாகவியல் துறை முதுகலை மாணவி ஜெனி வரவேற்றாா். கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியா் ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் பாஸ்கா் தொடக்கவுரை நிகழ்த்தினாா். உதவிப் பேராசிரியா் அமுதவாணி ஆண்டறிக்கை வாசித்தாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் கேடயங்கள் வழங்கப்பட்டன. வணிக நிா்வாகவியல் துறை மூன்றாம் ஆண்டு இளநிலை மாணவி ஜாஸ்லின் சாரா நன்றி கூறினாா்.