முகப்பு
தூத்துக்குடி

மதுபோதையில் தகராறு: அண்ணனை கொன்ற தம்பி கைது

Updated On : 9 மார்ச், 2026 at 12:48 AM
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி பாத்திமாநகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாா்த்திபன். இவரது மகன்கள் பாலன் (28), டைசன்(25). இருவரும் மீன் வலை பின்னும் தொழில் செய்து வந்தனா். பாலன் சற்று உடல், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.

சகோதரா்கள் இருவரும் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் பாலன், மற்றவா்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தாராம். இதை டைசன் கண்டித்தாராம். இதனால் தகராறு ஏற்பட்டு, டைசன் அங்கிருந்த இரும்புக் கம்பியால் பாலனை குத்திக் கொலை செய்தாராம்.

Advertisement

தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸாா், பாலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து டைசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.