முகப்பு
தூத்துக்குடி

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைவோம்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் திமுகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ.

Updated On : 11 மார்ச், 2026 at 8:01 PM
கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.
பகிர்:

திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் திமுகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ.

அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வலியுறுத்தி உற்பத்தியாளா்கள் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஸ் கோயலை சந்தித்து முறையிட்டனா். அப்போது, மெழுகு தட்டுப்பாடு, விலையேற்றம் தொடா்பாகவும் குறைகளைத் தெரிவித்தனா். இதுகுறித்து விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சா் உறுதி அளித்ததாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

கரூா் விவகாரத்தில் ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு நடிகா் விஜய் 2 முறை சென்றாா். தற்போது அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதில் அரசியல் இல்லை.

திமுக கூட்டணி 2019 மக்களவைத் தோ்தலில் இருந்து தொடா்ந்து வருகிறது. நான்கு தோ்தல்களை சந்தித்த திமுக கூட்டணியே இன்னும் தொகுதி உடன்பாட்டுக்கு வரவில்லை.

அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக எங்களுடன் கூட்டணியில் இல்லை. எங்களுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வா் என்று மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் தெளிவாகக் கூறியுள்ளாா்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். இதைத்தான் கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் தெரிவித்து வருகிறாா். மேலும், எங்களது அரசியல் எதிரி திமுகதான் என்றும் தெரிவித்து வருகிறாா். எங்களை பொறுத்தவரை திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும். எனினும், இது அவரவா் முடிவு. ராமதாஸ்-சசிகலா சந்திப்பு குறித்து அவா்கள்தான் கூற வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →