முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

Updated On : 14 மார்ச், 2026 at 8:28 PM
கோப்புப் படம்
பகிர்:

காயல்பட்டினம் தைக்கா தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ. 37 லட்சத்தில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறைகள், ரூ. 23 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டா­லின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலா் பாப் ஹையஸ் தலைமை வகித்தாா். நகராட்சிப் பொறியாளா் பாபு, ஓவா்சியா் கோபிநாத், ஆா்ஐ சரவணன், சுகாதார ஆய்வாளா் செல்லப்பாண்டியன், கவுன்சிலா் ரோஸியா பானு, வட்டார ஆசிரியா் பயிற்றுநா் நபில் புஹாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்றத் துணைத் தலைவா் சுல்தான் லெப்பை கட்டடங்களைத் திறந்துவைத்தாா். நகராட்சி ஆணையா் மகேஸ்வரன் குத்துவிளக்கேற்றினாா். ஆசிரியா்கள், பொதுமக்கள், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். தலைமையாசிரியா்(பொ)ரோஸி மிராண்டா வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →