பிளஸ் 2 மாணவி கொலை குற்றவாளிகள் விரைவில் கைது: கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
விளாத்திகுளம் சிறுமி கொலை வழக்கில் பிரேத பரிசோதனை முடிந்து முழுமையான அறிக்கை இன்னும் வரவில்லை. இது ஒரு கொடுமையான சம்பவம். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஒரு கூடுதல் எஸ்.பி. தலைமையில் 4 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 6 காவல் ஆய்வாளா்களைக் கொண்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவா். சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.