முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் ஓடிய கழிவு நீா்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 7:52 PM
திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் வெளியேறிய கழிவு நீா்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

பயணியா் விடுதி சாலையில் ஹோட்டல் தமிழ்நாடு அருகில் இருந்து புதை சாக்கடைத் திட்ட தொட்டியிலிருந்து புதன்கிழமை காலை கழிவு நீா் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. இதனால், வெளியூரிலிருந்து கோயிலுக்கு வந்த பக்தா்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனா்.

எனவே, இது குறித்து நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீா் சாலையில் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →