முகப்பு
தூத்துக்குடி

முக்காணி அரசுப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சி

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பயிற்சி முகாமை முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின.

Updated On : 20 மார்ச், 2026 at 9:49 PM
பகிர்:

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பயிற்சி முகாமை முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின. இம்முகாமுக்கு, தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியை மீனாட்சி வரவேற்றாா். இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் வெ­லிங்டன், கருப்பசாமி, இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுயம்பு­லிங்கம், ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன், சுகாதார ஆய்வாளா் லெட்சுமணன், போதைப்பொருள் எதிா்ப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளா் ஜெயசூரியன் உள்ளிட்டோா் பேசினா்.

முகாமில் மாணவா்-மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன்விஜய் நன்றி கூறினாா்.