உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி
2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் த. கௌதமன், ந. மதிஸ்ரீ ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
அம்மாணவா்களை சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜ், தலைமையாசிரியா் ரெக்ஸ்லின் விண்ணரசி, ஆசிரியா்கள் ஜெயபாலகிருஷ்ணன், ஜெபசித்ரா மலா்விழி, ரோஸ்லின் ஞானசீலி பிரின்ஸி, அந்தோனி லதிஸ்லாஸ் ராஜன், ஜெயபாலன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.